மேலும் செய்திகள்
வாழைத்தார் விலை சரிவு
12-Oct-2026
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட லாலாப்பேட்டை, பிள்ளபாளையம், கருப்பத்துார், கள்ளப்பள்ளி, வீரகுமாரன்பட்டி, பொய்கைப்புத்துார், மகாதானபுரம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் விளை நிலங்களில் வாழை சாகுபடி செய்துள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி, விருந்தினர்களுக்கு வாழை இலையில் பறிமாற, மக்கள் அதிகளவில் வாங்கி செல்வர்.இதற்காக, வாழை விவசாயிகள் விளைந்த இலைகளை அறுத்து, நேற்று விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த வாரம், மூன்று ரூபாய்க்கு விற்ற வாழை இலை ஒன்று, நேற்று, ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வாழை இலை கட்டு ஒன்று, 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர்.
12-Oct-2026