மேலும் செய்திகள்
லாரி மோதி 16 பசுக்கள் ம.பி.,யில் பலி
15-Sep-2024
கரூர்: கரூர் அருகில், பால் பண்ணையில் மாடு திருட முயன்ற பொறியியல் கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.----கரூர் தான்தோன்றிமலையை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 36. இவர், ஏமூர் சாலையில் பால் பண்ணை வைத்துள்ளார். நேற்று முன்தினம் பகல், 1:30 மணிக்கு பண்ணையில், சத்தம் வரு-வதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்-துள்ளார்.அப்போது, ஒருவர் ஏழு பசுமாடுகளை திருடி செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரை, கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரணையில், தான்தோன்றிமலை காமராஜ் நகர் முனியப்பன் மகன் பிரவீன், 19, என்பதும், இவர், பி.இ., இரண்டாம் ஆண்டு படித்த நிலையில், படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளார் என, தெரிய வந்துள்ளது. இவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
15-Sep-2024