மேலும் செய்திகள்
கிருஷ்ணராயபுரம் பகுதியில் வெற்றிலை விலை வீழ்ச்சி
25-Oct-2024
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வல்லம், வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், மகிளிப்பட்டி, நந்தன் கோட்டை, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி ஆகிய இடங்களில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர். வெற்றிலைகளை பறித்து லாலாப்பேட்டை வெற்றிலை கமிஷன் மண்டிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு, 100 கவுளி (ஒரு கவுளி - 100 வெற்றிலை) கொண்ட மூட்டை, 3,000 ரூபாய் விற்பனையானது. தற்போது வரத்து அதிகரிப்பு முகூர்த்த சீசன் குறைவு ஆகிய காரணங்களால் வெற்றிலை விலை சரிந்துள்ளது. 100 கவுளி கொண்ட மூட்டை, 2,000 ரூபாய்க்கு நேற்று விற்பனையானது.
25-Oct-2024