உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நிறைவடைந்த ஆவணி மாதம் வெற்றிலை விலை குறைந்தது

நிறைவடைந்த ஆவணி மாதம் வெற்றிலை விலை குறைந்தது

கரூர், ஆவணி மாதம், நிறைவு பெற்றதால் வெற்றிலைக்கு விலை குறைந்துள்ளது.கரூர் மாவட்டத்தில் புகழூர், சேமங்கி, முத்தனுார், புங்கோடை, கோம்புபாளையம், பாலத்துறை, திருகாடுதுறை, லாலாப்பேட்டை, கருப்பத்துார், மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட, பகுதிகளில், 2,500 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் இருந்து, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு நாள்தோறும் வெற்றிலை அனுப்பி வைக்கப்படுகிறது.சுப விசேஷங்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் ஆவணி மாதங்களில், அதிகளவில் நடக்கும். இதனால், இளம் பயிர் வெற்றிலை ஒரு மூட்டை (100 கவுளி) கடந்த சில நாட்களாக, 6,000 ரூபாய் வரை விற்றது. கடந்த, 17ல் ஆவணி மாதம் நிறைவு பெற்றதால், வெற்றிலை விலை குறைய தொடங்கியது. இளம்பயிர் வெற்றிலை விலை, 5,000 ரூபாயாக குறைந்தது. முதிகால் வெற்றிலை ஒரு மூட்டை, 2,000 ரூபாய் வரை விற்றது. தற்போது, 1,500 ரூபாயாக விலை குறைந்துள்ளது.நடப்பு புரட்டாசி மாதத்தில் வரும் நாட்களில், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் நவராத்திரி காரணமாக, வெற்றிலை விலை சற்று உயரும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ