கரூரில் இளையராஜா நேரடி நிகழ்ச்சிக்கான பூமி பூஜை
கரூர்:கரூர் மாவட்டம், கரூரில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, கோடங்கிபட்டி ஸ்ரீ காமாட்சி சேவை சங்கம் அறக்கட்டளை மைதானத்தில், இளையராஜா இன்னிசை நிகழ்ச்சிக்கான பூமி பூஜை விழா, ஸ்ரீ கோகுல் ஈவென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் அஜித் ராஜா தலைமையில் நடைபெற்றது.வரும் மே மாதம், 1ம் தேதி மாலை 6:30 மணியளவில் ராஜாவின் இசை ராஜாங்கம் நிகழ்ச்சி நடக்கிறது. மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா, லண்டனில் சிம்பொனி முடித்து முதல் முறையாக தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்திற்கு நேரடி இசை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இது குறித்து, ஸ்ரீ கோகுல் ஈவென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் அஜித் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:இந்நிகழ்ச்சியில், 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். 500 ரூபாய் முதல் டிக்கெட் வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. சிறப்பு சலுகையில் ஆட்டோ ஓட்டுனர், லாரி ஓட்டுனர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சலுகை விலையில், 250 ரூபாய்க்கு டிக்கெட் வழங்கப்பட உள்ளது. சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் மைதானத்தில் அமைக்கப்படும். கார் பார்க்கிங், டூவீலர் பார்க்கிங் போன்றவை தனித்தனியாக பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அமைக்கப்படும். பூமி பூஜையில் புரவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இளையராஜாவின் ரசிகர்கள் கலந்து கொண்டு பூமி பூஜை விழா சிறப்பிக்கப்பட்டது.இவ்வாறு கூறினார்.