உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திருச்சியில் கள் விடுதலை மாநாடு பீகார் முதல்வர் பங்கேற்க அழைப்பு

திருச்சியில் கள் விடுதலை மாநாடு பீகார் முதல்வர் பங்கேற்க அழைப்பு

கரூர், '' திருச்சியில், டிசம்பரில் கள் விடுதலை மாநாடு நடத்தப்படுகிறது. அதில், பீகார் மாநில முதல்வர், பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,'' என, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.கரூரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டம், கீழ்பவானி அணை நீர் நிர்வாகம், அரசாணைப்படி நடப்பது இல்லை. கீழ் பவானி அணை, முழு கொள்ளளவை இன்னும் ஓரிரு நாட்களில் எட்டி விடும். ஆனால், துார் வாருதல், பராமரிப்பு பணிகள் தாமதமாகிறது. 2026 சட்டசபை தேர்தலில், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் கள் இயக்கம் போட்டியிடும். பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றினால், கரூர் மாவட்டத்தில், 19 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.தமிழகத்தில், தேவையற்ற இலவச திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, மேட்டூர் சரபங்கா, காவிரி-குண்டாறு இணைப்பு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அப்போது, மேட்டூர் அணையில் திறக்கப்படும் உபரி நீர் கடலில் கலப்பது தவிர்க்கப்படும். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும், மக்களை சந்திக்க புறப்பட்டுள்ளனர். அவர்கள் கள் மீதான தடையை நீக்குவது குறித்து, அறிவிப்பு வெளியிட வேண்டும். அப்போதுதான், அறிவிப்பவர் வெற்றி பெற்று, முதல்வராக முடியும்.காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில், நாள்தோறும் நீர் பங்கீடு என்ற அம்சம் இடம் பெற வேண்டும். அப்போதுதான், காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். அதற்காக, தமிழக அரசு சீராய்வு மனுவை, நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வரும் டிசம்பரில், திருச்சியில் கள் விடுதலை மாநாடு நடக்கிறது. அதில், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.தமிழர் தேசிய கொற்றம் தலைவர் பாண்டியன், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பாலு குட்டி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !