மேலும் செய்திகள்
டிரைவர் சாவு போலீசார் விசாரணை
02-Sep-2025
குளித்தலை,குளித்தலை அடுத்த, மாயனுார் கிளிஞ்சுநத்தம் பகுதியில் பீஹார் மாநிலம், போஜிபூர் மாவட்டம், லால்காஞ்கிராமத்தை சேர்ந்தவர் முன்னாகுமார், 24, பெயின்டர். இவர் மனைவி பூள்தேவியுடன் வசித்து வந்தார். முன்னாகுமார் தினமும் வேலைக்கு சென்று வந்த பின், மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தினந்தோறும் மது குடித்து விட்டு வரலாமா என அறிவுரை வழங்கினார்.இதனால் மன விரக்தியில் இருந்த முன்னாகுமார் கடந்த, 7ம் தேதி இரவு 11:00 மணியளவில் வீட்டில் துாக்கிட்டு கொண்டார். பின்னர் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மனைவி கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
02-Sep-2025