உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காஷ்மீர் படுகொலையை கண்டித்து கரூரில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் படுகொலையை கண்டித்து கரூரில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

கரூர்:கரூர் மாவட்ட பா.ஜ., சார்பில், மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகளால் சுற்றுலா பயணிகள் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்தும், தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கியுள்ள பயங்கரவாதிகளை கண்டறிந்து, தி.மு.க., அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாநில பா.ஜ., துணைத்தலைவர் துரைசாமி, மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம், பொதுச்செயலாளர் சக்திவேல் முருகன், செயலாளர் செல்வராஜ், வக்கீல்கள் அணி செயலாளர் உமாதேவி, இளைஞர் அணி செயலாளர் தீனதயாளன் உள்பட, பா.ஜ., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை