கரூரில் பா.ஜ., அமைப்பு சாரா தொழில் பிரிவு ஆலோசனை
கரூர், கரூர் பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில், அமைப்பு சாரா தொழில் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் பிரேம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆறுமுகம் பேசினார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு வழங்கும் படிவம் உள்பட அனைத்து பணிகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர், வெவ்வேறு இடங்களில் வாக்குகளை வைத்திருப்பவர்களின் பெயர்களை நீக்க சொல்ல வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் காவேரி மோகன்ராஜ், இணை அமைப்பாளர்கள் சுந்தர்ராஜ், விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.