கரூரில் பா.ஜ., ஆய்வு கூட்டம் 3 லட்சம் உறுப்பினர் சேர்க்க இலக்கு
கரூரில் பா.ஜ., ஆய்வு கூட்டம்3 லட்சம் உறுப்பினர் சேர்க்க இலக்குகரூர், அக்.1- கரூரில் பா.ஜ., ஆய்வு கூட்டத்தில், 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய வீடு, வீடாக செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.கரூரில் உள்ள மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமைவகித்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட பார்வையாளர் ராஜ்குமார் கலந்து கொண்டார். நாடு முழுவதும் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம் செப்.1-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. பழைய உறுப்பினர்கள் புதுப்பித்துக் கொள்ளவும், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும் கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மண்டலம் வாரியாக பொறுப்பாளர்கள் நியமித்து பணிகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு பூத்திலும் குறைந்தது, 200 உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி,கரூர் மாவட்டத்தில், 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை அடையும் வகையில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், சக்திவேல் முருகன், கோபிநாத், நவீன் குமார், மகளிர் அணி மாநில துணைத்தலைவர் மீனா வினோத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.