உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்

கரூர்: கரூரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், கரூர் எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். இதில், மருத்துவ குழுவினர் ரத்ததானம் செய்தவர்களுக்கு, ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இங்கு, ஏராளமானோர் ரத்த தானம் வழங்கினர். நிகழ்ச்சியில், மாவட்ட செயலர் பொன்.ஜெயராமன், மாவட்ட துணை தலைவர்கள் கண்ணன், முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை