மேலும் செய்திகள்
வந்தே மாதரம் எங்கும் ஒலிக்கும்
15-Aug-2025
கரூர், பிரம்ம குமாரிகள் விஷ்வ மஹாதானி பவன் சார்பில், உலக சகோதரத்துவ நாள் மற்றும் ராஜயோகினி தாதி பிரகாஷ் மணிஜியின், 18வது நினைவு நாளையொட்டி, கரூர் கொங்கு திருமண மண்டபத்தில், பொறுப்பாளர் சாரதா தலைமையில் நேற்று ரத்த தான முகாம் நடந்தது.காலை, 8:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை நடந்த முகாமில், 100க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் வழங்கினர். பிறகு, ரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ், டி-சர்ட், டிராவல் பேக் மற்றும் ஜூஸ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், டாக்டர்கள் வேலுசாமி, திருமலைசாமி, கருப்பையா, மாதவராவ், சரவணன் உள்பட, பலர் பங்கேற்றனர்.நாளை (24ல்) கரூர் மண்மங்கலம் பிரம்ம குமாரிகள் பவனில் காலை, 8:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. அதில், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
15-Aug-2025