உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிணற்றில் இளம் பெண் உடல்; போலீசார் தீவிர விசாரணை

கிணற்றில் இளம் பெண் உடல்; போலீசார் தீவிர விசாரணை

கரூர்: க.பரமத்தி அருகே, கிணற்றில் கிடந்த இளம் பெண் உடலை கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே பவித்திரம் கருங்காட்டான் பகுதியில் உள்ள, விவசாய கிணற்றில் நேற்று மதியம், இளம்பெண் உடல் மிதப்பதாக, அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பிறகு, போலீசாரும், கரூர் தீயணைப்பு துறை வீரர்களும், சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இருந்த, இளம்பெண் உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதை தொடர்ந்து, க.பரமத்தி போலீசார் நடத்திய விசாரணையில், கிணற்றில் இறந்து கிடந்த இளம்பெண், நீலகிரி மாவட்டம், கூடலுார் சேரன் கோடு சிம்கானா பகுதியை சேர்ந்த சசிகரன் என்பவரது மகள் கிருத்திகா, 22, என தெரிய வந்தது. இவர் கோவையில் தங்கி, தனியார் மாலில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், க.பரமத்தி அருகே, விவசாய கிணற்றில் கிருத்திகா எப்படி இறந்து கிடந்தார். யார் அழைத்து வந்தனர். கொலையா, தற்கொலையா என்பது குறித்து, க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி