மேலும் செய்திகள்
எஸ்.ஐ., உடலுக்கு அரசு மரியாதை
07-Jan-2025
குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை, அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நாராயணன், 59. இவர், எல்லை பாதுகாப்பு படையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். தற்போது. கடைசியாக, மேற்கு வங்காளம், மால்டா பட்டாலியனில், இன்ஸ்பெக்டர் ஆப் டெக்னிக்கல் பதவி வகித்தார். இவர் நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார்.இவரது உடல் நேற்று அதிகாலை, கோவை விமான நிலையம் வந்தது. பின் அங்கிருந்து, பி.எஸ்.எப். ஐடி பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் அசிஸ்டன்ட் கமாண்டர் சைலேந்திர குமார் பாண்டே தலைமையில், 12 பேர் கொண்ட குழுவினர் காலை, 10:45 மணியளவில் தனி ராணுவ வாகனத்தில் அவரது உடலை குளித்தலை கொண்டு வந்தனர். பின் அவரது உடலை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர், இன்ஸ்பெக்டர் உடலுக்கு குளித்தலை எம்.எல்.ஏ.. மாணிக்கம், டி.எஸ்.பி., செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர். திருச்சி மாவட்டம், முசிறி உமையாள்புரத்தில், 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.எல்லை பாதுகாப்பு படையில் இன்ஸ்பெக்டராக நாராயணன் கடந்த, 1988ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். தொடர்ந்து, 38 ஆண்டுகள் பணியில் இருந்துள்ளார். வரும் பிப்ரவரி மாதம் பணி ஓய்வு பெற இருந்தார். இவருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, புள்ளமங்கலம் கிராமம். பின்னர், குளித்தலையில் வசித்து வந்தார். இவரது மனைவி சந்திரபிரபா குளித்தலை மாரியம்மன் கோவில் யூனியன் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
07-Jan-2025