உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாரி வாங்கி கடன் தொல்லை: டிரைவர் விபரீத முடிவு

லாரி வாங்கி கடன் தொல்லை: டிரைவர் விபரீத முடிவு

குளித்தலை :திருச்சி மாவட்டம், தும்பலம் அடுத்த கிழக்கு பெருமாள் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், 45, லாரி டிரைவர். இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கடன் மூலம் லாரி வாங்கி பயன்படுத்தி வந்தார். லாரி மூலம் போதிய வருவாய் கிடைக்காததால். அதிகமான கடன் ஏற்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு லாரியை விற்றும், கடன் அடைக்க முடியாததால், அடிக்கடி மனம் உடைந்து காணப்பட்டார்.இந்நிலையில் கடந்த 4ம் தேதி நள்ளிரவு, குளித்தலை அண்ணா நகரில் உள்ள வாடகை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி கோகிலா, 32, கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் சடலத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை