மேலும் செய்திகள்
கரூரில் 3வது திருமணம் செய்த 'கல்யாண ராணி' கைது
26-Dec-2024
கரூர், :கரூர் அருகே, சிறுமியை திருமணம் செய்து கொண்டு, பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவனை, மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுவன், 16 வயது சிறுமியை, கடந்தாண்டு செப்., மாதம் ஜெகதாபி பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். பிறகு சிறுமிக்கு, சிறுவன் பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, தகவல் அறிந்த தான்தோன்றிமலை கிராம நல அலுவலர் பூங்கொடி, கரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சிறுவனை, மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.சிறுமியை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், திருமணத்துக்கு உடந்தையாக இருந்ததாக, சிறுவனின் பெற்றோர் மீதும், கரூர் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
26-Dec-2024