உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி

கரூர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.மருத்துவ கல்லுாரியின் இயல்கூடம் முன், மருத்துவ கல்லுாரி டீன் ராஜா கொடியைசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பிறகு, கல்லுாரி வளாகத்தில் நடந்த பேரணியில் மருத்துவ கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மருத்துவ கல்லுாரி துணை முதல்வர் ராமேஸ்வரி, டாக்டர்கள் குமார், சிவராமன் உள்பட பலர் பங்கேற்றனர். நாளை காலை, 10:00 மணிக்கு மருத்துவ கல்லுாரி ஆடிட்டோரியத்தில், மார்பக புற்றுநோய் ஒழிப்பதில் பெரிதும் துணை புரிவது, மருத்துவத்தின் பங்களிப்பா அல்லது சமுதாயத்தின் பங்களிப்பா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.ஏற்பாடுகளை, மருத்துவ கல்லுாரி பேராசிரியர்கள் ரமேஷ், உமா மகேஸ்வரி, முருகதாசன், நந்தகோபால் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ