உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தங்கையை அடித்து கொன்ற பாசக்கார அண்ணன் கைது

தங்கையை அடித்து கொன்ற பாசக்கார அண்ணன் கைது

குளித்தலை: குளித்தலை அருகே, தங்கையை அடித்து கொலை செய்த அண்ணனை, போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த நங்கவரம் டவுன் பஞ்., நச்சலுார் மேல நந்தவனக்காட்டை சேர்ந்தவர் தேவராஜன், 30; கூலி தொழிலாளி. இவரது மனைவி ராமாயி, 25. இந்த தம்பதிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது; 3 வயதில் குழந்தை உள்ளது.கடந்த சில நாட்களாக, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து தேவராஜன், தன் மைத்துனர் பிரசாந்த், 27, என்பவரிடம் நேற்று முன்தினம் இரவு தகவல் தெரிவித்தார். நேற்று காலை, 8:30 மணிக்கு தங்கை ராமாயி வீட்டுக்கு வந்த பிரசாந்த், அங்கிருந்த மைத்துனர் தேவராஜனை வெளியே அனுப்பிவிட்டு, தங்கையிடம் பேசினார். அப்போது, ஆவேசமடைந்த பிரசாந்த், தங்கையை கைகளால் பலமாக தாக்கியும், தன் வேட்டியால் தங்கை கழுத்தை நெரித்தும் கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பினார்.இதுகுறித்து தேவராஜன் புகாரின்படி, நங்கவரம் போலீசார் பிரசாந்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை