உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குருணிகுளத்துப்பட்டியில் குண்டும், குழியுமான சாலை

குருணிகுளத்துப்பட்டியில் குண்டும், குழியுமான சாலை

கரூர்: கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தேவர்மலை பஞ்.,ல் குரு-ணிகுளத்துப்பட்டி உள்ளது. இங்கிருந்து நரியம்பட்டி செல்லும் சாலை, 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டதாக கூறப்படுகி-றது. சாலையில் கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியு-மாக காட்சியளிக்கிறது. அரசு பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது: குருணிகுளத்துப்-பட்டி - -நரியம்பட்டி சாலையில், நாயக்கனுார், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து ஏராளமான ஏழை மாணவ, மாணவியர் தமிழக அரசு வழங்கிய இலவச சைக்கிளில், குருணிகுளத்துப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிக்கு சென்று வருகின்றனர். சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் மழைக் காலங்களில் பள்ளி மாணவ, மாணவியர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும் என பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை