மேலும் செய்திகள்
சுய தொழில் பயிற்சி... தேசம் உயர்த்தும் முயற்சி
25-Aug-2024
கரூர் : தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, யு.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சி அளிக்கப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, 100 மாணவர்களுக்கு ஓராண்டு பயிற்சி வழங்கவுள்ளது. பயிற்சியை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 21 முதல், 36 வயது நிரம்பியவர்களும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவாக ஓராண்டு விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவையும் தாட்கோ வழங்கும். இத்திட்டத்தில் சேர, www.tahdco.comஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
25-Aug-2024