உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையில் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்றலாமே

சாலையில் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்றலாமே

கிருஷ்ணராயபுரம், டிச. 22-வல்லம் சாலையில், முள் செடிகள் வளர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் வாய்க்கால் முதல் வல்லம், கொம்பாடிப்பட்டி, மத்திப்பட்டி வரை தார் சாலை செல்கிறது. ஏராளமானோர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். தற்போது வல்லம், கொம்பாடிப்பட்டி சாலையோரங்களில் அதிகமான முள் செடிகள் வளர்ந்து வருகிறது. இதனால் வாகனங்களில் செல்லும் போது, ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர்.மேலும் சாலையில் ஒதுங்கும் போது, வாகன ஓட்டிகள் மீது முள் செடிகள் உரசுவதால் சிறு காயங்கள் ஏற்படுகிறது. எனவே, சாலையோரம் வளர்ந்து வரும் முள் செடிகளை அப்புறப்படுத்த, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை