உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அனுமதியின்றி சாலை மறியல் 20 பேர் மீது வழக்குப்பதிவு

அனுமதியின்றி சாலை மறியல் 20 பேர் மீது வழக்குப்பதிவு

குளித்தலை, அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட, 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பாலவிடுதியில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி சுரேஷ்குமார் பலியானார். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க கோரி, சுரேஷ்குமார் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று முன்தினம் பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷன் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னறிவிப்பின்றி சாலையை மறைத்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்து வகையில், பலமுறை போலீசார் எச்சரிக்கை செய்தும் மறியலை கைவிடவில்லை. இதையடுத்து ராமராஜன், 39, சிவக்குமார், 39, கார்த்திகேயன், 22, போதுமணி, 45, தினேஷ்குமார், 27, கருப்பசாமி, 26 உள்பட, 20 பேர் மீது பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி