மேலும் செய்திகள்
ரூ.12 கோடி மோசடி நிதி நிறுவனம் மீது புகார்
27-Nov-2024
கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலை நெய்தலுார் தெற்கு பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன், 35; இவர், தோகமலையில் உள்ள, தனியார் சீட்டு கம்பெனியில், இரண்டு லட்ச ரூபாய் சீட்டில் சேர்ந்து, ஒரு லட்சத்து, 78 ஆயிரத்து, 400 ரூபாய் வரை செலுத்தியுள்ளார். பிறகு, தொடர்ந்து பணம் செலுத்த முடியாத நிலையில், வாசுதேவன் சீட்டு கம்பெனி நடத்துகிறவர்களிடம், செலுத்திய பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால், பணத்தை திருப்பி தராமல், சீட்டு கம்பெனி பங்குதாரர்கள் வினோத் லோகநாதன், 33; முருகானந்தம், 35; செந்தில்குமார், 45; ஆகியோர், வாசுதேவனை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து, வாசுதேவன் அளித்த புகாரின் படி, கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், வினோத், லோகநாதன் உள்பட, மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
27-Nov-2024