உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோழி மேய்ந்ததில் தகராறு 7 பேர் மீது வழக்குப்பதிவு

கோழி மேய்ந்ததில் தகராறு 7 பேர் மீது வழக்குப்பதிவு

ப.வேலுார், பரமத்தி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ஜீவேந்திரன், 30; கூலித்தொழிலாளி. இவரது மனைவி கீர்த்திகா, 24; ஆசிரியர். இவர், வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர், 43; இவரது மனைவி ரவிதா, 40; நேற்று முன்தினம், கீர்த்திகா வளர்க்கும் கோழிகள், ரவிதா வீட்டு பகுதியில் புகுந்து பூச்செடிகளை சேதப்படுத்தியுள்ளது. ஆத்திரமடைந்த ரவிதா, கீர்த்திகாவிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், ரவிதா, தன் உறவினர்களுடன் சேர்ந்து கீர்த்திகாவை சரமாரியாக தாக்கியுள்ளார். காயமடைந்த கீர்த்திகாவை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பரமத்தி போலீசார், ஏழு பேர் மீது வழக்குப்பதிந்து, அதே பகுதியை சேர்ந்த நித்திய செல்வன் மகன் பிரபு, 33, என்பவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான பவிதா, தீபிகா, வசீகரன், சாந்தன், அம்பி, பிரபு ஆகிய ஆறு பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை