திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றியவர் மீது வழக்கு
கரூர், கரூரில், இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஏமாற்றிய வாலிபர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை வ.உ.சி., தெருவை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் கதிரேசன், 28. இவர், கரூர் அண்ணா நகரை சேர்ந்த, ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்ற, 27 வயது பெண்ணுடன் கடந்த, 2021 முதல் பழகியுள்ளார். அப்போது, அந்த பெண்ணுடன் கதிரேசன் தனியாக குடும்பம் நடத்தியுள்ளார். பிறகு கதிரேசன், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதையடுத்து இளம் பெண் அளித்த புகார்படி, கரூர் மகளிர் போலீசார் கதிரேசன் மீது கடந்த, 19ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.இந்நிலையில், நேற்று கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கதிரேசன் தாய் சித்திரை செல்வி, சகோதரர் குமரேசன் ஆகியோர் மீதும், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்துள்ளார்.