மேலும் செய்திகள்
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரிகள் பறிமுதல்
13-Apr-2025
கரூர், கரூர் அருகே, அனுமதியின்றி கிராவல் மண் எடுத்து சென்றதாக, இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்ட சுரங்கத்துறை ஆய்வாளர் முருகேசன், 35, உள்ளிட்ட அலுவலர்கள், நேற்று முன்தினம் வெள்ளியணை சாலை, வெங்ககல்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டிராக்டரில் அனுமதி இல்லாமல், ஒரு யூனிட் கிராவல் மண் எடுத்து சென்றதாக, திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்துாரை சேர்ந்த ஜோதிராஜா, கரூர் கோடங்கிபட்டியை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் மீது, ஆய்வாளர் முருகேசன் போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து, தான்தோன்றிமலை போலீசார் ஜோதிராஜா, விக்னேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
13-Apr-2025