உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பேனர் வைத்த வி.சி.க., நிர்வாகிகள் மீது வழக்கு

பேனர் வைத்த வி.சி.க., நிர்வாகிகள் மீது வழக்கு

கரூர்,கரூரில் பிளக்ஸ் பேனர் வைத்த, வி.சி.க., நிர்வாகிகள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கரூர் மாவட்ட வி.சி.க., சார்பில், அக்கட்சி நிர்வாகிகள், திருச்சி பேரணி குறித்து மனோகரா கார்னர் பகுதியில், அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர்களை நேற்று முன்தினம் வைத்திருந்தனர். அந்த பேனர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக போலீஸ் எஸ்.ஐ., ரவிச்சந்திரன் புகார் செய்தார்.இதையடுத்து, கரூர் டவுன் போலீசார், மாவட்ட செயலாளர் இளங்கோவன், நிர்வாகிகள் செந்தில், மல்லேஸ்வரன், மணிகண்டன், ஜெயக்குமார் ஆகியோர் மீது கரூர் டவுன் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை