உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பொது இடத்தில் தகராறு 3 பேர் மீது வழக்கு பதிவு

பொது இடத்தில் தகராறு 3 பேர் மீது வழக்கு பதிவு

குளித்தலை, குளித்தலை அடுத்த மகளிப்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 39. கட்டளை மேட்டு வாய்க்கால் பாலத்தில் கடந்த 21ல், மாலை 6:00 மணியளவில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தகாத வார்த்தையில் பேசி திட்டி கொண்டிருந்தார். அவர் மீது, லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதேபோல் அதே பகுதியை சேர்ந்த சங்கப்பிள்ளை, 67, என்பவர் நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில், இரட்டை வாய்க்கால் பாலத்தில் நின்று கொண்டு பொதுமக்களும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினார். அவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பணிக்கம்பட்டி சந்தையில், வளையபட்டியை சேர்ந்த கமலஹாசன், 30, என்பவர் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்தார். அவர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ