உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பொது சொத்துக்கு சேதம் 4 பேர் மீது வழக்கு பதிவு

பொது சொத்துக்கு சேதம் 4 பேர் மீது வழக்கு பதிவு

குளித்தலை, குளித்தலை அடுத்த கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., கிழக்கு காலனியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் பொது கழிப்பிடம் உள்ளது. இதில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சுவிட்ச் பாக்ஸ், குடிநீர் குழாய்கள், சின்டெக்ஸ் தொட்டி மற்றும் ஆழ்குழாய் கிணறு ஆகியவவை சேதப்படுத்துப்பட்டுள்ளது. இது குறித்து டவுன் பஞ்., செயல் அலுவலர் கிருஷ்ணன், அரசின் பொது சொத்துகளை கிழக்கு காலனி பகுதியை சேர்ந்த தியாகராஜன், இளையராஜா, மகாமுனி, ரூபக் ஆகிய நான்கு பேர் சேதப்படுத்தியிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக மாயனூர் போலீசில் புகார் அளித்தார். இதன்படி, 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை