உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மறியலில் ஈடுபட்ட யூனியன் தலைவர் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

மறியலில் ஈடுபட்ட யூனியன் தலைவர் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

குளித்தலை, டிச. 21-குளித்தலை அடுத்த, கோட்டமேட்டில் நேற்று முன்தினம் யூனியன் குழு தலைவர் விஜய விநாயகம் (அ.தி.மு.க.,) துணைத் தலைவர் இளங்கோவன் (அ.தி.மு.க.,) யூனியன் கவுன்சிலர் கவுரி (அ.தி.மு.க.,) மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் முருகேசன், அறிவழகன், சந்திரமோகன், ராஜேஸ்வரி, சத்யா, சங்கீதா ஆகியோர், யூனியன் கமிஷனர் ராஜேந்திரனை கண்டித்து, உரிய அனுமதியின்றி அரசுக்கு எதிராகவும், சட்ட விரோதமாகவும் ஒன்று கூடி, குளித்தலை-மணப்பாறை நெடுஞ்சாலையில் உள்ள கோட்டைமேட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இவர்களை இன்ஸ்பெக்டர் உதயகுமார் எச்சரிக்கை செய்தும், கண்டுகொள்ளாமல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், மறியலில் ஈடுபட்டனர். எனவே இவர்கள் மீது, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ