உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்குப்பதிவு

இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்குப்பதிவு

கரூர்: அரவக்குறிச்சி அருகே, இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வாலிபர் உள்பட, 2 பேர் மீது ரூரல் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பள்ளப்பட்டியை சேர்ந்த அபுதாகீர் மகன் முகமது வஜாஜ், 24. இவர், 20 வயதுடைய இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின், முகமது வஜாஜூக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க, வீட்டில் ஏற்பாடு நடந்து வந்தது. இதுகுறித்து, இளம்பெண் கேட்டபோது, முகமது வஜாஜ், அவரது சகோதரி ஆகியோர் மிரட்டியுள்ளனர். இதையடுத்து, இளம்பெண் அளித்த புகார்படி, கரூர் ரூரல் மகளிர் போலீசார், முகமது வஜாஜ் மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ