உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாங்கல் நிதி நிறுவன அதிபர் சாவு சந்தேக மரணமாக வழக்கு பதிவு

வாங்கல் நிதி நிறுவன அதிபர் சாவு சந்தேக மரணமாக வழக்கு பதிவு

கரூர், வாங்கல் அருகே, வாய், கை, கால்கள் கட்டிய நிலையில் கிணற்றில் இறந்து கிடந்த நிதி நிறுவன அதிபர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.கரூர் மாவட்டம், வாங்கல் முனையனுார் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 46. கரூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் கடந்த, 9ம் தேதி காலை, நிதி நிறுவனத்துக்கு செல்வதாக வீட்டில் இருப்பவர்களிடம் கூறி விட்டு சென்றார். ஆனால், அன்றிரவு பாலசுப்பிரமணி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி அபிநயா, 35, வாங்கல் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.இந்நிலையில், குப்புச்சிப்பாளையத்தில் உள்ள, சுமதி என்பவரது விவசாய கிணற்றில் வாய், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், பாலசுப்பிரமணி உடல் மீட்கப்பட்டது. சந்தேக மரணம் என்ற வகையில், வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை