உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கால்நடை நடமாட்டம் வாகன ஓட்டிகள் தவிப்பு

கால்நடை நடமாட்டம் வாகன ஓட்டிகள் தவிப்பு

கரூர், கரூரில் நகரின் திருமாநிலையூர், காமராஜர் மார்க்கெட், பாலம்மாள்புரம், அரசு காலனி, பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமானோர் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகளை பகல் நேரங்களில், மேய்ச்சலுக்காக சாலைகளில் விட்டு விடுகின்றனர். அவை சாலையை ஆக்கிரமித்து செல்வதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.சில நேரங்களில், கால்நடைகள் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளை தள்ளிவிடுவதால் விபத்தில் சிக்குகின்றனர். போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியில், கால்நடைகள் செல்ல அனுமதி வழங்காமல், அதன் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ