உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / த.வெ.க., கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சி.பி.ஐ., விசாரணை

த.வெ.க., கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சி.பி.ஐ., விசாரணை

கரூர்: கரூர் சி.பி.ஐ., அலுவலகத்தில், த.வெ.க., பிரசார கூட்டம் நடந்த நாளில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் நேற்று விசாரணை நடந்தது.கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில், 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை, கரூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். த.வெ.க., பிரசார கூட்டம் நடந்த வேலுச்சாமிபுரத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு எஸ்.எஸ்.ஐ., மற்றும் நான்கு போலீசார், ஒரு ஊர்க்காவல் படை வீரரிடம் நேற்று காலை, 11:00 முதல் 12:30 மணி வரை சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி