தம்பதிக்கு கொலை மிரட்டல் சென்ட்ரிங் தொழிலாளி கைது
குளித்தலை, குளித்தலை அடுத்த எழுநுாற்றுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 38; இவரது மனைவியுடன், கடந்த, 9ல் கோட்டமேட்டில் உள்ள பேக்கரியில் தின்பண்டம் வாங்க டூவீலரில் சென்றார். பின் பொருட்களை வாங்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தபோது, கோட்டமேடு யூனியன் ஆபீஸ், நால்ரோடு அருகே கீழகுட்டப்பட்டு பகுதியை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளியான சூர்யா, 23, என்பவர், தம்பதியை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பன்னீர்செல்வம் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, சென்ட்ரிங் தொழிலாளி சூர்யாவை கைது செய்தனர்.