மேலும் செய்திகள்
உலக ரத்த தான நாள் விழா
15-Jun-2025
கரூர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி கலையரங்கில், ரத்ததான கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.கல்லுாரி டீன் லோகநாயகி தலைமை வகித்தார். அதிக முறை ரத்த தானம் வழங்கியவர்கள், ரத்ததானம் முகாம்களுக்கு ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர், ரத்ததானம் வழங்கிய கல்லுாரிகள், நிறுவனங்களுக்கு, கலெக்டர் தங்கவேல் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரி, புகழூர் டி.என்.பி.எல்., காகித ஆலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்கள், அலுவலர்கள், ரத்த கொடையாளர்கள் உள்ளிட்ட, 155 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் ராஜா, நோயியல் துறை பேராசிரியர் ரேவதி உள்பட பலர் பங்கேற்றனர்.
15-Jun-2025