மேலும் செய்திகள்
மாதா தேர் திருவிழா
21-Sep-2025
கரூர்: கரூர், புனித தெரசம்மாள் ஆலயத்தில், 95வது தேர் திருவிழா நேற்று இரவு நடந்தது.பிரசித்தி பெற்ற, கரூர் புனித தெரசம்மாள் ஆலயத்தில், ஆண்டுதோறும் அக்., மாதம் தேர் திருவிழா நடந்து வருகிறது. நடப்பாண்டு கடந்த, 3 காலை, பங்கு தந்தை லாரன்ஸ் தலைமையில், ஆலய வளாகத்தில் கொடியேற்று விழா நடந்தது. அதைதொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு திருப்பலி நடந்தது. நேற்று இரவு, 7:00 மணிக்கு கோவில் வளாகத்தில் இருந்து, வாண வேடிக்கையுடன், முக்கிய வீதிகள் வழியாக தேர் திருவிழா நடந்தது. அதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை புனித தெரசம்மாள் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
21-Sep-2025