உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மேட்டுமருதுாரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

மேட்டுமருதுாரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

குளித்தலை: குளித்தலை அடுத்த மேட்டுமருதுார் சமுதாய கூடத்தில், நேற்று டவுன் பஞ்-சாயத்து அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின், காலாண்டு குழு கூட்டம் நடந்தது. டவுன் பஞ்., துணைத்தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார்.செயல் அலுவலர் அண்ணாமலை, சுகாதார மேற்-பார்வையாளர் பாக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஆனந்தி, 'குழந்தைகள் நலன் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், குழந்தை திருமணம் தடுத்தல், குழந்-தைகள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்புதல், பெண் குழந்தைகள் கட்டாயம் பள்ளி, கல்லுா-ரிக்கு செல்லுதல். தாய், தந்தை இழந்த மாணவ மாணவியருக்கு உதவித்தொகை வழங்குதல்' உள்ளிட்டவை குறித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை