உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 30 நாட்களுக்குள் பதிவு செய்ய குழந்தை, முதியோர் இல்லங்களுக்கு கெடு

30 நாட்களுக்குள் பதிவு செய்ய குழந்தை, முதியோர் இல்லங்களுக்கு கெடு

கரூர், நவ. 1- ஒரு மாதத்திற்குள் பதிவு செய்ய குழந்தைகள், முதியோர் இல்லங்கள் தவறும்பட்சத்தில், அவைகள் சீல் வைக்கப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டம் முழுவதும் குழந்தை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இத்தகைய இல்லங்கள் சட்டங்களின்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும்.அவ்வாறு பதிவு பெறாமல், மாவட்டத்தில் செயல்படும் இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை பதிவு செய்ய விண்ணப்பிக்க ஒருமாத அவகாசம் வழங்கப்படுகிறது. ஒரு மாதத்திற்குள் விண்ணப்பிக்க தவறும்பட்சத்தில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இல்லங்களுக்கு சீல் வைக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ