அய்யர்மலை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில்சித்திரை முகூர்த்தக்கால் நடும் விழா
குளித்தலை:குளித்தலை அடுத்த, அய்யர்மலையில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மலை உச்சியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு சித்திரை பெருந்திருவிழா நேற்று காலை, 9:00 மணியளவில் முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.சிவாச்சாரியார்கள் முகூர்த்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்தனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க முகூர்த்தக் கால் நடப்பட்டது. மே 1ல் கொடியேற்றம், 5ல் திருக்கல்யாண உற்சவம், 9ல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிகழ்வில் கோவில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள், கோவில் குடிபாட்டை சேர்ந்தவர்கள், பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.