உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தண்ணீர் தொட்டி முன் தேங்கிய கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

தண்ணீர் தொட்டி முன் தேங்கிய கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

தண்ணீர் தொட்டி முன் தேங்கியகழிவுநீரால் பொதுமக்கள் அவதிதர்மபுரி, நவ. 3-தர்மபுரி அருகே, தண்ணீர் தொட்டி முன் கழிவு நீர் தேங்கி இருப்பதால், தண்ணீர் பிடிக்க வரும் பொதுமக்கள், அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.தர்மபுரி, வட்டார வளர்ச்சி காலனியில், தர்மபுரி நகராட்சி சார்பில் கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. இதில், இப்பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள், குடியிருப்போர் தண்ணீர் பிடித்து வந்தனர். அந்த இடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கட்சியின் கொடிகம்பம் அமைக்க கட்டடம் கட்டி விட்டனர். இதனால், தண்ணீர் தொட்டி இருக்கும் இடத்திற்கு போதிய இடைவெளி இல்லாமல் போனது. மேலும் சிலர், தொட்டியின் அருகிலேயே பிளாஸ்டிக் குப்பையை வீசிச் செல்வதால், தண்ணீர் வெளியேற முடியாமல் தொட்டி அருகிலேயே தேங்கியது. தேங்கிய தண்ணீர், கழிவுநீராகி, கொசு உற்பத்தியாகும் இடமாக உள்ளது. இதனால் மக்கள் பல்வேறு பெரிதும் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி, நகராட்சி துாய்மை பணியாளர்கள், அதை உடனடியாக சுத்தம் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !