சி.ஐ.டி.யு., மாநில மாநாடு குழுவுக்கு கரூரில் வரவேற்பு
கரூர், கரூர் வந்த சி.ஐ.டி.யு., மாநாடு குழுவை, மா.கம்யூ., கட்சி நிர்வாகிகள் நேற்று வரவேற்றனர்.தமிழக சி.ஐ.டி.யு.,வின், 16 வது மாநில மாநாடு இன்று முதல் வரும், 9 வரை கோவையில் நடக்கிறது. அதில், பங்கேற்க கோவைக்கு செல்லும் வழியில், நேற்று சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் ஜோதியுடன் கரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்தனர். அவர்களை, கரூர் மாவட்ட மா.கம்யூ., செயலாளர் ஜோதிபாசு தலைமையிலான நிர்வாகிகள் வரவேற்றனர்.அப்போது மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணியன், ஜீவானந்தம், ராஜா முகமது, மா.கம்யூ., கட்சி நகர செயலாளர் தண்டபாணி உள்பட பலர் உடனிருந்தனர்.