கட்டட பொறியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கரூர் :கரூர் மாவட்ட கட்டட பொறியாளர்கள் சங்கம் சார்பில், துணைத்தலைவர் ரவிக்குமார் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், கட்டுமான தொழிலுக்கு தேவையான எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி, சிமென்ட் உள்ளிட்ட, பொருட்களின் விலையை குறைக்க வேண்டும், கட்டுமான பொருட்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும், விலை உயர்வை கட்டுப்படுத்த, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.வர்த்தக சங்க தலைவர் ராஜூ, செயலாளர் வெங்கட்ராமன், தோழமை சங்க நிர்வாகிகள் தனபதி, பாங்க் சுப்பிரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.