வேங்காம்பட்டியில் துாய்மை பணி
கிருஷ்ணராயபுரம், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், கருப்பத்துார் பஞ்சாயத்து வேங்காம்பட்டியில், துாய்மை பாரத இயக்கம் சார்பில் துாய்மை பணி நடந்தது. மழைநீர் செல்லும் தடங்களில் தேங்கிய பிளாஸ்டிக், அரசு தொடக்கப்பள்ளி வளாகம், பஞ்சாயத்து அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலக வளாகம் ஆகிய பகுதிகளில் தேங்கிய குப்பையை, துாய்மை பணியாளர்கள் அகற்றினர்.