மேலும் செய்திகள்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
11-Sep-2024
கரூர்: முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. பள்ளி, கல்லுாரி, அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவுகளில் மாவட்ட அளவில், 27 வகையான போட்டிகளும், மண்டல அளவில், 53 வகையான போட்டிகளும் நடக்கிறது.கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், கல்லுாரி மாணவ, மாணவியருக்கு தடகளம், சிலம்பம், கால்பந்து, ஹாக்கி போட்டிகள் நடந்தது. காந்திகிராமத்தில் இறகுப்பந்து போட்டி, புலியூர் செட்டிநாடு பொறியில் கல்லுாரியில் கிரிக்கெட், வீனஸ் மெட்ரிக் பள்ளியில் டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது.கால்பந்து ஆண்கள் பிரிவில், 12 அணிகள், பெண்கள் பிரிவில், 5 அணிகள் மோதின. ஹாக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில், 5 அணிகள், பெண்கள் பிரிவில், 4 அணிகள் மோதின. நாக் அவுட் முறையில் போட்டிகள் நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு மேஜை பந்து போட்டி, வீனஸ் மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
11-Sep-2024