கூட்டுறவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
கூட்டுறவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்குளித்தலை, அக். 22-தமிழகம் முழுவதும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள், மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதன்படி கரூர் மாவட்டம், குளித்தலை காவிரி நகரில் உள்ள பணியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன் நேற்று காலை, 10:00 மணியளவில் குளித்தலை, தோகைமலை யூனியனை சேர்ந்த தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் சங்க பணியாளர்கள் சார்பில் நடைபெற்ற காலவரையற்ற நிறுத்த போராட்டத்திற்கு, மாவட்ட பொருளாளர் செல்வரத்தினம் தலைமை வகித்தார்.மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் சுப்ரமணி, குளித்தலை ஒன்றிய தலைவர் ரமேஷ், தோகைமலை ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், நகர கூட்டுறவு சங்க விற்பனையாளர்களிடம் இருந்து அபராதத்தை இரு மடங்காக வசூலிப்பது ரத்து செய்ய வேண்டும். கூட்டுறவு நியாய விலை கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை, அதிகளவு இறக்கி விற்பனை செய்ய தர குறியீடு நிர்ணயிப்பதை ரத்து செய்ய வேண்டும். கடை விற்பனையாளர்களுக்கு அவர்களது சொந்த ஊரிலேயே அல்லது ஒன்றியத்திலோ வீட்டில் இருந்து, 10 கி.மீ., தொலைவிற்குள் குடும்பத்துடன் ஒன்றிணைந்து இருக்குமாறு வேலை இடமாற்றம் செய்து தர வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.