ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.68.04 லட்சம் தேங்காய் ஏலம்
கரூர், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய், 68 லட்சத்து, 4,557 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம், நேற்று முன்தினம் நடந்தது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 31,640 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஒரு கிலோ குறைந்தபட்ச விலை, 61.49 ரூபாய், அதிகபட்ச விலை, 72.66 ரூபாய், சராசரி விலை, 68.19 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 11,816 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 7 லட்சத்து, 92,397 ரூபாய்க்கு விற்பனையானது.கொப்பரை தேங்காய், 576 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சம், 237.19 ரூபாய், அதிகபட்ச விலை, 255.80 ரூபாய், சராசரி, 254.10 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்ச, 172.88 ரூபாய், அதிகபட்சம், 250.50 ரூபாய், சராசரி, 237.76 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 25,279 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 60 லட்சத்து, 12,160 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 68 லட்சத்து, 4,557 ரூபாய்க்கு விற்பனையானது.