உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் பிளஸ் 2 தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு

கரூரில் பிளஸ் 2 தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு

கரூர்: கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வு மையத்தை கலெக்டர் தங்கவேல் நேற்று ஆய்வு செய்தார்.தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ் 2 பொது தேர்வுகள் தொடங்கியது. கரூர் மாவட்டத்தில், 43 தேர்வு மையங்களில், 104 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த, 9,623 மாணவ, மாணவிகளும், 102 தனித்தேர்வாளர்களும் என, 9,725 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.அதில் நேற்று தமிழ் தேர்வை, 9,392 மாணவ, மாணவ, மாணவிகளும், பிரென்ச் பாட தேர்வை, 22 பேரும், அரபிக் பாடத்தை, 132 பேர் உள்பட, 9,546 பேர் எழுதினர். கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அமைக்கப்பட்டுள்ள பிளஸ் 2 தேர்வு மையத்தை, கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை