உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகழூரில் வளர்ச்சி திட்டப்பணி கலெக்டர் முத்துக்குமரன் ஆய்வு

புகழூரில் வளர்ச்சி திட்டப்பணி கலெக்டர் முத்துக்குமரன் ஆய்வு

கரூர்:புகழூர் தாலுகாவில், பல்வேறு துறைகள் சார்பில் நடந்துவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் முத்துக்குமரன் ஆய்வு செய்தார். இதில், வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள அடிப்படை வசதிகள், திருக்காட்டுத்துறை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகள், கோம்புப்பாளையத்தில், 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார மைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். புகழூர் நகராட்சியில் பணிபுரியும் துய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமில் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், புகழுர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள அறிவுசார் மையம், டி.என்.பி.எல்., ரேஷனில் பொது மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரம், புகழூர் நகராட்சி, காந்தியார் நடுநிலை பள்ளியில் காலை உணவு திட்டம் உள்ளிட்டவற்றை, கலெக்டர் முத்துக்குமரன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அபிராமி உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி