உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்டத்தில் 5 இடங்களில் நாளை கல்லுாரி கனவு நிகழ்ச்சி

மாவட்டத்தில் 5 இடங்களில் நாளை கல்லுாரி கனவு நிகழ்ச்சி

கரூர் : 'மாவட்டத்தில் ஐந்து இடங்களில், நாளை கல்லூரி கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில், 2023 - 2024 பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவியருக்கு உயர்கல்விக்கு வழிகாட்டுதல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த,'கல்லூரி கனவு' என்ற நிகழ்ச்சி நாளை கரூர் கொங்கு திருமண மண்டபம், புத்தாம்பூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரி, அரசு கலைக் கல்லுாரி, அய்யர்மலை, குளித்தலை; செர்வைட் கல்வியியல் கல்லூரி, தோகைமலை, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, கணியாளம்பட்டி ஆகிய, 5 இடங்களில் நடக்கிறது.இங்கு, பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் துறை வல்லுனர்கள்,உயர்கல்வி தொடர்பான ஆலோசனை வழங்குகின்றனர்.கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லுாரி, பாலிடெக்னிக், வேளாண் கல்லுாரி, மருத்துவக்கல்லுாரி, செவிலியர் கல்லுாரி, அரசு துறை சார்ந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை, மாவட்ட தொழில் மையம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட திறன் பயிற்சி மற்றும் வங்கிகள் சார்பாக உயர்கல்வி பயில உள்ள மாணவ-மாணவியர் பாடப்பிரிவுகளை அறிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதில் கலந்துகொண்டு மாணவ, மாணவியர் பயன்பெறலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை